• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,

ByS.Ariyanayagam

Feb 14, 2026

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை அரிவாளால் வெட்டி தப்பி ஓட முயன்ற போது நகர் DSP.கார்த்திக் துப்பாக்கியால் விக்னேஷின் காலில் சுட்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த தளபதி(24) என்பவர் கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

இந்நிலையில் இந்த 2 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.