மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் கிராமத்தில் கணவாய் கருப்புசாமி கோவில் பள்ளிவாசல் பகுதியில் நாகமலை அடிவாரத்தில் நாகர் தீர்த்தம் கோவிலுக்கு செல்லும் சாலையில் சாலை அமைக்க கோரி அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதியில் சாலை அமைப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டி விட்டு சென்ற நிலையில் தொடர்ந்து பணிகளை செய்யாததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலேயே பள்ளிவாசல் கணவாய் கருப்புசாமி கோவில் ஒன்றும் உள்ளது. மேலும் சோழவந்தானில் இருந்து செக்கானூரணி செல்லும் முக்கியசாலையாக இது உள்ளதால் கொடிமங்கலம் பகுதியில் உள்ள நாகம்மாள் கோவிலுக்கு செல்வதற்கு மேலக்கால் மற்றும் செக்கானூரணி பகுதி மக்கள் நாகமலை அடிவார பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஜல்லிக் கற்கள் கொட்டி சென்று சாலை அமைக்காததால் கோவிலுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் மருத்துவ உதவிகளுக்கும் மேலக் கால் சோழவந்தான் செக்கானூரணி பகுதிகளுக்கு செல்வதற்கு ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ள சாலையில் கடும் சிரமத்திற்கு இடையில் சென்று வருவதாக கூறுகின்றனர். குழந்தைகள் வயதானவர்கள் இதனால் வெளியில் வராமல் வீட்டில் முடங்கி கிடப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்லிக்கற்கள் கொட்டி அரைகுறையாக விட்டுச் சென்ற சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






