• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நரேந்திர மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

Feb 13, 2026

புதுக்கோட்டையில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டினை புறக்கணித்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா ஜ க அரசையும் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட திமுக பொருளாளர் அரு. வீரமணி வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி ஒன்றிய குழு தலைவர் சின்னையா மறவப்பட்டி மாரிமுத்து வடவாளம் மணிமாறன் கவி நாடு மேற்கு வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை ஒன்றியம் மாலையீடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கமிட்டி நகர துணை தலைவர் மணி ஆறுமுகம் ஓபிசி அணி தலைவர் ஆனந்தன் செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி திருமலராயசமுத்திரம் சோலை மேட்டுப் பட்டி கணேசன் ராசா வயல் அடைக்கலம் ரெங்கசாமி திமுக செயலாளர் ஆரோக்கியம் உள்பட ஏராளமான கூட்டணி கட்சியினர் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.