அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகசார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் குகன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகள் குறித்து கேட்டறிந்தும் கழக பொதுச்செயலாளர் அறிவித்த 5 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பழனி பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் .

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு மற்றும் கூடுதல் சுமைகள் குறித்து வீடு வீடாக சென்று பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்து விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை பில்லே சாட்சி என்று எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பழனி பகுதியில் நடைபெற்றது.
முன்னிலை இருந்து கலந்து கொண்டவர்கள் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் மாவட்ட கழகப் பொருளாளர் வேணுகோபாலு பழனி நகர செயலாளர் முருகானந்தம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர் தீன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சதீஷ்குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமார் கிளைகளை செயலாளர் ஜெயராமன் நகரக் கழக துணைச் செயலாளர் சிவசுப்பிரமணி பிரதிநிதி நடராஜ் நகர கலை இணைச்செயலாளர் பாண்டியம்மாள் முருகன் ஆகியோர் வீடு வீடாக சென்று பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் குடும்ப மாத கூடுதல் செலவு குறித்து கேட்டறிந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செலவினங்களை ஒப்பிட்டு கூடுதலாக ஆண்டுக்கு ஆகும் செலவினங்களை பில்-ஆக எடுத்துக் கொடுத்து இனி வருங்காலத்தில் செலவினங்களை குறைக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தேர்தலை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் அறிவித்த அம்மா இல்லம் திட்டம், மானியத்தில் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உட்பட ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.










