• Thu. Feb 12th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்கால் வருகை..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 11, 2026

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் விபி ராமலிங்கம் இன்று காரைக்காலில் செய்தியார்களை சந்தித்து பேசினார். பரப்புரை மேற்கொள்ள காரைக்கால் வரும் மத்திய உள்துறை அமைச்சர் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க உள்ளதாகவும் தொடர்ந்து கோட்டுச்சேரி பகுதியில் சுவர் விளம்பரம் வரைய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் சரியாக 11 மணிக்கு காரைக்கால் சந்தை திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடைக்கு வந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் பாஜக கிளைச் செயலாளர் வீட்டில் பாஜக கொடி ஏற்றிவிட்டு அந்த கிளைச்செயலாளரின் பெயர் பலகையை வீட்டு வாசலில் பதித்துவிட்டு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.