• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் காத்திருப்பு போராட்டம்..,

Byமுகமதி

Feb 11, 2026

புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள் இன்று காத்திருப்பு அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இது குறித்து கவுரவ விரிவுரையாளர் சண்முகப்பிரியா கூறுகையில் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும், யு சி ஜி பேராசிரியர்களுக்கு வழங்கியிருக்கும் ரூபாய் 57 ஆயிரத்து 800 ஊதியம் வழங்க வேண்டும், 12 மாத ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறுகால விடுமுறையையும் மருத்துவ காப்பீட்டையும் ஓய்வு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து இருக்கிறோம். கல்வித்துறையில் மற்ற நிலைகளில் இருப்பவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப் பட்டு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் எங்களைப் போன்ற கவுரவ விரிவுரையாளர்கள் வஞ்சிக்கப் படுகிறோம் என்றார்.

இந்தக்கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த பிரச்சனைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு இருக்கிறது என்ற நிலையில் புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் இன்று இந்த போராட்டத்தை 90பேர் கலந்து கொண்டு நடத்தினார்கள்.