• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அரசுத் துறை நிர்வாகங்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Feb 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பாக அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக அரசுத்துறை நிர்வாகங்களை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராக பரபரப்பான கருத்துக்கள் எடுத்து முன் வைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் உரிமைகளை கேட்டு போராட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சோழவந்தான் தொகுதிக்கு சோழவந்தானிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் பேசினர்.

மாணிக்கமூர்த்தி ஒருங்கிணைப்பு செய்தார். இதில் பிச்சைமணி அதிமுக பேரூர் செயலாளர் முருகேசன், அமமுக பேரூர் செயலாளர் திரவியம், சோழவந்தான் பாஜக மண்டல் தலைவர் கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்