• Sat. Feb 7th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஐக்கிய விவசாயிகள் சங்க போராட்டம்..,

மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் வகையில் டெல்லியில் கடுமையான குளிரிலும் விடாது

போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங் டல்லேவால். அவரது போராட்டத்தின் எதிரொலி. மோடி அரசு நிறைவேற்றிய மூன்று சட்டங்களுக்கு எதிராக.ஒரு புள்ளியோ,கமாவோ
கூட மாற்றமாட்டேம் என சவால் விட்ட சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை வெற்றி என முடித்த ஜக்ஜித் சிங் டல்லேவால் தலைமையில்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் 5.வகை கோரிக்கைகளை வலியுறுத்தி. இன்று (பெப்ரவரி 7)ம் நாள் கன்னியாகுமரியில் அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபத்தில். தேசத்தந்தையின் உருவப்படத்திற்கு ஜக்ஜித் சிங், டல்லேவால், பி.ஆர். பாண்டியன், பி.அய்யாக்கண்ணு, குருபுரு சாந்தகுமார்,குமரி மாவட்டம் விவசாய சங்கங்களின் தலைவர். வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றே, வழக்கறிஞர் கோமர்லால் மற்றும் தமிழகம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த விவசாய பிரதிநிதிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்வில் பேசிய பி.ஆர். பாண்டியன் காவல்துறையிடம் 15-நாட்களுக்கு முன்பே உரிய அனுமதிக்கு மனு செய்தும். நிகழ்ச்சி தொடங்கும் கடைசி நிமிடம் வரை வெளிப்படுத்திய அலட்சியம், அனாகாரிமான செயலை கண்டிப்பதுடன். ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளிடம் காவல்துறை நடத்துகொண்ட அணுகுமுறை குறித்து முதல்வரிடம் புகார் தெரிவிப்போம் என்றார்.

நிகழ்வில் பேசிய ஜக்ஜித் சிங் டல்லேவால் அவரது பேச்சில். நம்முடைய முக்கியமான
கோரிக்கைகளான
1)உச்ச நீதிமன்றம் நியமித்த நீதியரசர் நவாப்சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்று.
2) எம்.எஸ். சுவாமிநாதன் குழு
பரிந்துரையை உடன் நிறைவேற்று.

3) வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை
உடன் கொண்டு வந்திடு…

4) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தங்களின் வேளாண்
கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடு…

5) வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறு… என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி. இன்று
கன்னியாகுமரியில் (பெப்ரவரி 7)ம் நாள் தொடங்கும் இந்த விவசாயிகள் யாத்திரை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வழியாக. எதிர் வரும் மார்ச் 19_ம் நாள்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சம் விவசாய பெருங்குடி மக்கள் அவர்களின் குடும்பத்தாருடன். விவசாயிகளின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல்
நிறை வேற்றக்கோரி மோடி அரசை வலியுறுத்தி நடத்தபோகும் பொதுக்கூட்டம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.