• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கண்காட்சி..,

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், முன்பள்ளி மாணவர்கள் (Pre-KG முதல் UKG வரை) அவர்கள் வகுப்பறைகளில் கற்ற அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகளை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கல்விக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் சிறுவர்-சிறுமிகள் மொழித் திறன், எண்கணித அடிப்படை அறிவு, அறிவியல் ஆர்வம், கலைச்செயற்பாடுகள், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் நல்லொழுக்கப் பண்புகள் போன்ற பல்வேறு கற்றல் விளைவுகளை செயல்முறை வடிவில் அழகாக விளக்கினர். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தாங்களே விளக்கம் அளித்தது பெற்றோர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

பெற்றோர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, குழந்தைகளின் படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் முழுமையான வளர்ச்சியை பாராட்டினர். கல்வி துறையில் பள்ளி மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தும் இந்தக் கண்காட்சி, “கற்றலும் மதிப்புகளும் இணைந்த கல்வி” என்ற பள்ளியின் நோக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பெற்றோர்களை அதிகம் ஈர்த்தது. பள்ளி மாணாவ,
மாணவர்கள் வெளிப்படுத்திய கற்றலின் தன்மையை வெகுவாக ஈர்த்தது.