• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கோவை பந்தய சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Feb 3, 2026

தேவேந்திரகுல வெளாளர்களை எஸ்இ பட்டியலில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேவேந்திர குல வேளாளர்கள் கோவை பந்தய சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவேந்திரகுல வேளாளர்களின் சமூக விடுதலையும், மரியாதையையும், அரசியல் அதிகாரமும், உண்மையான இட ஒதுக்கீட்டு சலுகையும், பட்டியல் வெளியேற்றத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது எனவும், தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட வருட பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை, அரசு கிடப்பில் போடப்பட்டு உள்ளது, எனவே தேவேந்திர குல வேளாளர்களை தற்பொழுது, உள்ள எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை பந்தய சாலை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன் கூறியதாவது..
தமிழக அரசு நீண்ட வருடமாக இந்த பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், எங்களது கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே உள்ளது எனவும், இதனை கண்டித்து இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரும் தமிழக அரசு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றப்படாமல் இருந்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுகின்ற கட்சிக்கு உரிய பாடம் புகட்ட உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான புஷ்பானந்தம், ராஜ தேவேந்திர ஸ்வாமிகள், மணிமாறன், பேச்சு முத்து, வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் சந்திரன், சுந்தரராஜ், திருமுகனார், ராமதாஸ், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசுப்பிரமணியன், தீபம் முனியப்பன், செட்டி அசோக் பண்ணாடி, பார்த்திபன், தங்கப்பழம், லதா ராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது