சென்னை, தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்சிசி கேம்பஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39வது ஆண்டு விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையாளர் எஸ். நெல்சன் கலந்து கொண்டு கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிறப்பு விருந்தினருக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிலம்பாட்டம், கராத்தே, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறமையான நிகழ்வுகள் விருந்தினர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

விழாவின் இறுதியில், பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஜி.ஜே. மனோகர், பள்ளி முதல்வர் திருமதி சபீன் பால், துணை முதல்வர் திருமதி ஜஸ்டின் ஜெபா ஆகியோர் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.






