• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Jan 24, 2026

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

மோடியும், பழனிச்சாமியும் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள்.

மோடி என் ஆங்கிலத்தில் பேசவில்லை.

இந்தி மொழிக்கு எதிரானவர் அல்ல நான்.

தமிழ்நாட்டிற்கு மன்மோகன் சிங் ஐந்து ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார் மோடி அரசு 4 ரூபாய் 20 பைசா கொடுக்கிறது.

தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

ஓசூர், மதுரை ஏர்போர்ட்டுக்கு வர வேண்டிய விரிவாக்க பணிவாக இருக்கட்டும். மோடி பணம் கொடுக்க மறுக்கிறது.

பிரதமர் நேற்று பேசும்போது தமிழ்நாட்டிற்கு நாங்கள் அள்ளிக் கொடுத்து உள்ளோம் மன்மோகன் சிங் எதுவுமே பண்ணவில்லை.. கூறியுள்ளது வியப்பை அளித்துள்ளது.

கூட்டணி தொடர்பாக ஜனவரி 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர். மற்றும் ராகுல் காந்தி அவர்கள்.

வெளியே பேசக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். பேசுவது நாகரிகமாகாது. மாணிக்கம் தாகூர்.

அன்புமணி, டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது.

அதிகாரி இந்தக் கூட்டணியில் பணம் அதிகாரம் அதிகமாக உள்ளது இந்தி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தக் கூட்டணி பணம் அதிகாரம் கொண்ட கூட்டணி.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை தோல்வி‌ அடைய வேண்டும்.

இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வேண்டும்.

இரண்டாவது இடத்திற்கு யார் வருவார்? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்..

ஆளுநர் ரவி அவர்கள் அவமதிக்கும் செயல்களை செய்து வருகிறார் இது நோயாக மாறிவிட்டது இந்த நோயை கேரளாவிற்கும் பரவி விட்டது தற்போது கர்நாடகாவிற்கும் பரவி விட்டது.

இந்த நோயை தடுக்க வேண்டிய ஆண்டி வைரஸ் வரவேண்டும்.

ஆர் எஸ் எஸ் ஆல் அமர்த்தப்பட்டுள்ள ஆளுநர்கள் இதுபோன்ற செய்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குதல் பற்றி எனக்கு விமர்சனம் இல்லை.

சின்னத்திற்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை என்பது முடிந்துவிட்டது.

எதிர்க்கட்சி தலைவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை, ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்.

அமித்ஷா ஆளுநரையே எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிவிட வேண்டியது தானே.

பழனிச்சாமியை கவர்னராக ஆக்கிவிட வேண்டியது தானே.

தொடர்ந்து தமிழகத்திற்கு கழகத்தை விளைவிக்க கூடிய ‌ நெருக்கடிகளை ஆளுநர் செய்து வருகிறார் என்பது வருத்தம் அளிக்கிறது.

பாஜக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினருக்கு ஒரு ஒற்றுமை உள்ளது. அன்புமணி தினகரன் என அனைவர் மீதும் சிபிஐ விசாரணை உள்ளது அனைவரையும் ஒன்று நிற்பதை சிபிஐ ஆகிவிட்டது. இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். சிபிஐ அதிகாரிகளால் விரட்டப்பட்டு உருவாக்கப்பட்ட கூட்டணி மக்களால் நம்பிக்கை இழக்கப்பட்ட கூட்டணி. மூன்றாவது இடத்திற்கே தட்டு தடுமாறி வரப்போகிறது.

இந்தி பேசுகிற முதலாளிகள் நிறைய இருக்கிறார்கள் இந்த பலத்துடன் இந்த கூட்டணி தேர்தலில் நிற்க போகிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம் எம்எல்ஏக்களே தட்டு தடுமாறி மூன்றாவது இடத்திற்கு தான் வரப்போகிறார்கள். மக்களை நம்பாமல் பணத்தையும் அதிகாரத்தையும் நம்பி நிற்கின்ற கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் குறிப்பாக பாஜக வேரூன்றதற்காக முயற்சித்து வருகிறது. ஏற்கனவே உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த முறை தோற்கடிக்கப்பட்டு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆளுநர் ரவி அந்தப் பதவிக்கு அவமானம் கொடுக்கும் செயல்களை செய்து வருகிறார். அது ஒரு நோயாக மாறி ரவியிடமிருந்து கேரளா, கர்நாடகாவிற்கும் பரவி வருகிறது. இது கவர்னர்களுக்கான கொரோனாவாக உள்ளது. இந்த இந்த நோயை தடுக்க வேண்டிய ஆண்டிவைரஸ் வர வேண்டும். அனைத்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் ஆல் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரின் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது.

புதிய கட்சிக்குப் போய்விட்டதா மற்ற கட்சிக்குப் போய் விட்டதா என மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களிடம் இல்லை என்பது நேற்று கூட்டத்தில் இல்லை. ரூ.300 கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் ஆர்வமாக கைதட்டினார்கள். இந்த மாதிரி பேச்சு மிகவும் போரிங்காக இருந்தது. மற்ற கட்சித் தலைவர்களின் பேச்சு பயம் கலந்த பேச்சாக தான் இருந்தது.

சிபிஐ முயற்சியால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகத்தான் கண்ணுக்கு முன்பாக தெரிந்தது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது பிரதமர் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

அதிகாரத்தில் பங்கு தொடர்பாக தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் அதை பற்றி பேசக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.