புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் மன்றம் என்ற பெயரில் ஒரு இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்களில் திருவள்ளுவர் மன்ற விழா மற்றும் இலக்கிய மன்ற விழாவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொத்தமங்கலம் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதில் பல்வேறு உறுப்பினர்களையும் சேர்த்து பிரம்மாண்டமான விழாவாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் பழனி அரங்கசாமி தலைமை வகித்தார். சின்னப்பத் தமிழர், பணி நிறைவு பெற்ற தணிக்கை பதிவுத்துறை அலுவலர் நடராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திராவிட செல்வம், வட்டார கல்வி அலுவலர் துரை. ரத்தினம், தலைமை ஆசிரியர் ராசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா இளஞ்செழியன் கலந்து கொண்டார்.

அப்போது திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா நடைபெற்றது அவ் விழாவில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியிடப்பட்டது
அ.சி சின்னப்பத்தமிழர் வெளியிட முன்னாள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் பெற்றுக்கொண்டார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் இராசப்பன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவராகப் பணியேற்றவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வில் வென்று பணிவாய்ப்புப் பெற்றவர்களுக்குப் பாராட்டும் நடைபெற்றது. பள்ளி அளவில் அரசுப் பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டும் கேடயம் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. வெற்றிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

அனைவரையும் பாராட்டி வாழ்த்தி பேசிய கோட்டாட்சியர் அபிநயா இளஞ்செழியன் பேசுகையில் நான் இந்தப் பணிக்கு வருவதற்கு முன்பு பலரும் வயதாகிக் கொண்டு போகிறது சீக்கிரம் திருமணம் செய்யவில்லையா என்று கேட்டபோது நான் ஒரே வார்த்தையாக சொன்னேன் குரூப் ஒன் தேர்வில் தேர்வாகி அரசுப் பணிக்கு சென்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் பெண்கள் என்னைப்போல உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தங்களுக்கு வேண்டுகோளாகவும். திருமணத்திற்கு யாரும் அவசரப்பட வேண்டாம். ஆனால் அரசு பணிக்கு தொடர்ந்து முயற்சி செய்து உயர்ந்த பதவிகளுக்கு வாருங்கள். அப்போது உங்களுக்கு தகுந்தவாறு உயர்ந்த இடத்தில் வாழ்க்கையும் அமையும். உங்களைத் தேடி அனைத்து உறவுகளும் நட்புகளும் எல்லா விதமான செல்வங்களும் தேடி வரும் என்பதில் உறுதியாக இருங்கள். என்னை இந்த விழாவிற்கு நீங்கள் அழைத்து இருக்கிறீர்கள் என்றால் நான் கோட்டாட்சியராக இருப்பதால்தான் அழைத்திருக்கிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தப் பகுதியில் உள்ள அனைவரும் என்னைப் போல என் இடத்தில் இருக்கும் மற்றவர்களைப் போல நாங்களும் உயர்வதற்கு வழிவகை செய்து கொள்ளுங்கள் என்னால் ஆன உதவிகளையும் நான் செய்து தருகிறேன். ஆனால் நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினார்.





