தீபாவளி பண்டிகையை யாரும் எப்படியும் கொண்டாடுங்கள் என்று இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளை அரசே கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடாத நிலையில் பொங்கல் விழா மட்டும் சிறப்பாக கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி புரியும் தலைமை அலுவலரான மாவட்ட ஆட்சியர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பொங்கல் விழாவை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் ஒருபுறம் பொங்கல் வைத்து கொண்டாடினாலும் மறுபுறம் வட்டாட்சியர் முதல் கடை நிலைக் காவலர்கள்வரை அனைவரும் பொங்கல் திருநாள் விழாவில் சமம் தான் என்கிற வகையில் கனியும் கரண்டியும், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி, சிலம்ப விளையாட்டுகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது பானை உடைத்தல் போட்டியாகும். இந்த போட்டியில் அனைவரும் பங்கு பெறலாம் என்ற நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது புதுக்கோட்டை வட்டாட்சியராக பணிபுரியும் செந்தில் நாயகியும் பானை உடைத்தல் போட்டியில் பங்கு பெற்றார். அவரது கண்கள் கட்டப்பட்டன கையில் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது. அதை உயர்த்திப் பிடித்தவரே சென்ற அவரால் வினாடி நேரத்தில் அந்தப் பானையை உடைக்க முடியாமல் போனது.

அதற்குப் பின் தனது கண்களைக் கட்டிக் கொண்டு வந்த அவரது ஓட்டுனரான காமராஜ் என்பவர் சரியான இலக்கை கடந்து காலடி எடுத்து வைத்து அடையாளத்தை கண்டுபிடித்து பானையை உடைத்தார். இது பொங்கல் திருநாள் விளையாட்டாக இருந்தாலும் வட்டாட்சியர் உடைக்க முடியாமல் போன பானையை அவரது ஓட்டுநர் உடைத்து விட்டார் என்று பலரும் சிலாகித்து ரசித்து பேசினர்.





