• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைத்த எய்டு இந்தியா நிறுவனர்..,

Byமுகமதி

Jan 13, 2026

புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மா சத்திரம் என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

100 குடும்பங்களுக்கு மேல் இருக்கும் இந்த காலனியில் வழக்கம்போல் கல்வியில் அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள். அரசு வழங்கும் சலுகைகளையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள். இவர்களுக்கு எய்டு இந்தியா சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சில உதவிகள் செய்யப்பட்டது.
அதன்படி சிலருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் படிக்காமல் இருக்கும் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக மாலை நேர டியூஷன் சென்டர் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக அருகாமையில் இருக்கும் ஊர்களுக்கு சென்று அங்குள்ள பள்ளிகளை படித்து வருகிறார்கள்.

அவ்வாறு பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவியர் 10 பேரை தேர்வு செய்து அவர்களது சுகாதாரம் பேணவும் தன்மானம் காக்கவும் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை இதன் திறப்பு விழாவிற்கு வந்து அவரே திறந்து வைத்தார். ஒரு கழிவறைக்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் 10 கழிவறைகளுக்கும் 6 லட்சம் ரூபாய் செலவில் இந்த காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கலந்து கொண்ட எம்எல்ஏ சின்னத்துரை எய்டு இந்தியாவின் நிறுவனர் டாக்டர் பாலாஜி சம்பத் தாமோதரன் சாந்தி திருமலை ஜூன் கல்பனா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி ராஜா இணை ஒருங்கிணைப்பாளர் பிச்சம்மாள் ஆகியோரை இந்த நரிக்குறவர் காலணியில் சிலம்பம் கற்றுக்கொண்ட மாணவியர் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். பின்னர் 10 கழிவறைகளையும் திறந்து வைத்து இந்த கழிவறைகளை முறையாக பராமரித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நிறுவனர் பாலாஜி சம்பத் கூறுகையில் போக்கஸ் வில்லேஜ் என்கிற திட்டத்தின் கீழ் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கிராமங்களின் தத்தெடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற பாடுபட்டு வருகிறோம். அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா இந்த கிராமத்தைப் பற்றி எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதனால் இங்கு வசிக்கும் நரிக்குறவர்கள் மட்டுமல்லாது பூம்பூம் மாடு வைத்திருக்கும் ஆதியன் வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் செய்து வருபவர்களுக்கும் என பலருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. கல்விக்கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அவர்கள் கல்வியில் உயர்ந்தால் தான் பொருளாதாரத்தில் உயர முடியும் என்பதை கவனத்தில் கொண்டு இடைநிற்றல் இல்லாத கல்வியைக் கொடுக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்னும் அவர்களுக்கு நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து செய்வோம் என்றார்.

இதுகுறித்து மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜா கூறுகையில் இந்த பகுதி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறார்கள் என்ற போதிலும் கல்வியின் அவசியத்தை உணராமல் இருக்கிறார்கள். அதை உணரச் செய்யும் விதமாகத்தான் இது போன்ற உதவிகளை செய்தால் ஆவது தொடர்ந்து படிப்பார்கள் அவர்கள் பட்டதாரியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் செய்து கொண்டிருக்கிறோம். எங்களது முயற்சி வீண் போகவில்லை. இந்த பகுதியில் இருந்துதான் ஒரு பொறியாளரும் ஒரு பட்டதாரியும் சில பெண்கள் செவிலியர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

அனைவரையும் இதுபோல் உயர்கல்வி கற்கச் செய்யும் விதமாகத்தான் கணினிமயமாக்கப்பட்ட கல்விக்கூடம் ஒன்றையும் திறந்து வைத்து அதற்கு ஆசிரியர் நியமித்து மாலை நேர கல்வியாக பயிற்றுவித்து வருகிறோம் என்றார். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எங்களுக்கு இந்த சார் எல்லாம் வந்து உதவி செய்கிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கல் நேரத்தில் பொங்கல் பரிசாக எங்களுக்கு இந்த கழிவறைகள் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைகிறோம் என்று நரிக்குறவர் இன மக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.