புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் MSA பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செ.நல்லபெருமாள் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் கண் மருத்துவம் பல் மருத்துவம் இருதயம் நுரையீரல் நலப்பிரிவு பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் உயர்தர நுண்கதிர்வீச்சு (ஸ்கேன்) என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் அன்னவாசல் சுற்றியுள்ள சித்தன்னவாசல் முக்கணாமலைபட்டி கீழக்குறிச்சி என பல்வேறு கிராமங்களில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மகப்பேறு பெண்கள் முதியோர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு தங்களுக்கான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




