நாங்கள் தீய சக்தியும் இல்லை தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம் எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது.

விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்கு தான் தெரியும். அவரிடம் தான் கேட்க வேண்டும் நாம்.
பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம்.
பாஜகவின் சி டீமாக இருக்க கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை அவரை பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும் அரசியலில் உண்மையில் நடக்காது.
எம்ஜிஆர் 1972ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன் தான் அவர் கட்சி உறுதியானது.
அதேபோல் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தை காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோகிதை இருக்கிறது. ஆனால் விஜய் அந்த தேர்தலில் புறமிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டு கொள்ளவில்லை.
எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது.
சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார் விஜய். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை.
பாஜகவின் சீடீம் தான் விஜய்.
கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்படி இருக்கையில் அவருக்கு கொள்கை வேறு கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பாஜகவின் அடிமையாக அவர் இருக்கிறார்.

அதிமுக கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள் திமுகவை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும். தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இருக்கிறது.
பெரிய தலைவர் தான் அவர். பிக் பாஸ் தலைவர் தான் நயினார் நாகேந்திரன்…..
என்பதிலும் நிலையாக அதிமுக இருக்க மாட்டார்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு வெளியே வந்து வேறு ஒன்றை பேசுவார்கள் அதே போல் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை செயல்பட்டுள்ளார்.




