தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பராஜகுமார் 39 பயனாளிகளுக்கு ரூ.3.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்

மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும். சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் மற்றும் சிறும்பான்மையினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்றையதினம் நடைபெற்ற விழாவில் அதனடிப்படையில், 20 பயனாளிகளுக்கு ரூ.112,000/- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், புதிதாக தொழில் தொடங்குவதற்கு கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,95,000/- மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.60,000/-க்கான காசோலைகள் OT CIT 39 பயனாளிகளுக்கு ரூ.3,67,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 1 & 2 தேனி மாவட்ட கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் 1 & 2 கௌரவ செயலர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










