- மதுரை மாநகர காவல் ஆணையர்.. முனைவர் ஜே லோகநாதன் உத்தரவின் பெயரில்.. போக்குவரத்து காவல் துணை ஆணையர் s. வனிதா அவர்களது மேற்பார்வையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் சீரிய முயற்சியில் மதுரை பைபாஸ் ரோடு குரு தியேட்டர் சந்திப்பில்.. கடந்த வருடம் போக்குவரத்து நெரிசலையும்.. விபத்தினையும் தடுக்கும் நடவடிக்கையில்.. சிக்னல் இல்லாத U TURN சிஸ்டம்.. (U வடிவ திருப்பம் ) அறிமுகப்படுத்தப்பட்டு..
- ஆரப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் இருந்து வரும் பெரும்பான்மையான வாகனங்கள் சிக்னல் இன்றி,, போக்குவரத்து நெரிசல் இன்றி..வெகு இலகுவாக அந்த குரு தியேட்டர் சந்திப்பை கடந்து செல்கின்றனர். மேலும் இந்த U TURN SYSTEM துவங்கும் முன்பு 10 உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது.. இந்த சிஸ்டம் நடைமுறை படுத்திய பின்பு இந்த ஆண்டு அந்த பகுதியில் உயிரிழப்புகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இதனை வரவேற்று வெகுவாக பாராட்டினர்.. அதனை தொடர்ந்து தற்போது அதேபோன்று அதிக போக்குவரத்து நெரிசலும். அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய பைபாஸ் ரோடு,பொன்மேனி சந்திப்பு அருகில் கடந்த 16.12.25 தேதி.. இந்த பகுதியில் U TURN சிஸ்டம் ஆரம்பிக்கப்பட்டு.. போக்குவரத்து இலகுவாக சென்று கொண்டிருக்கிறது.. இதனை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி சார்பு ஆய்வாளர் சந்தனகுமார் தொடர்ந்து மேற்பார்வை இட்டு வருகின்றனர்.. அந்த பொன்மேனி பகுதியில் கடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும். போக்குவரத்து காவல் துறையினரை பாராட்டி நன்றி தெரிவித்து கை குலுக்கி செல்கின்றனர் மேலும் பொதுமக்கள் கூறுகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து விபத்துணையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை மற்றும் முடக்குச் சாலை தேனி ரோடு ஜெயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதாகவும் மேலும் விபத்துக்கள் குறைவதுடன் அவ்வப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கையும் எடுத்து வருவதால் விபத்தில்லா பகுதியாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றன











