சென்னையில் நடைபெற உள்ள பேரணி நடத்துவது சம்மந்தமான உசிலம்பட்டியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக12 அம்சகோர்க்கை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 19 ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறுகிறது.,


இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 12 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 19 ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஸ்வரன்,கதிரேசன், மாநில ஒருங்கிணைப்
பாளர்கள் சார்லஸ்,செல்லப்பான்டி, காஞ்சிபுரம் வாசுதேவன்,பாண்டி, மகேஸ்வரன் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தூய்மை காவலர்கள் மற்றும் கணக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




