மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற மஞ்சமலை சாமியை வணங்கி கோவிலில் ஜல்லிக்கட்டு அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வாடிவாசலில் அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் மடத்து கமிட்டி தலைவர் மச்ச வேல் செயலாளர் பிரபு பொருளாளர் கார்த்தி மற்றும் மடத்துக்கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொது மகாலிங்க மடத்து கமிட்டி நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஊர் பெரியவர்கள் என அனைவரையும் நேரடியாக சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளனர்.

சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் அரசின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் ஆன்லைன் மூலம் காளைகளும் மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்படுவார்கள் 1100 காளைகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தனர்.








