• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிற்கு சென்றிருக்க மாட்டார்..,

ByS. SRIDHAR

Nov 28, 2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்:

திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது.

யாரை வைத்தும் யாரும் எந்த அரசியலும் செய்தாலும் மக்களுக்கு செய்கின்ற களப்பணி இதுதான் மக்கள் மனதில் நிற்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நாலரை ஆண்டு காலமாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்குத் துணை நிற்கும்.

தற்போதும் புனிதமான ஆட்சி தான் நடக்கிறது எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும்.

கர்ச்சீப்பு போத்தி செல்கின்ற பழக்கம் எங்களுக்கு கிடையாது. அதற்கு தகுதி உடைய இந்தியாவிலேயே ஒரே அரசியல் தலைவர் கட்சி போய் மூடிக்கொண்டு செல்கின்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

கார் மாறி காட்சியளிப்பவர் ஏசி காரிலேயே வியர்வை வந்து கர்சிப்பால் துடைத்தேன் என்று சொல்பவர் இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தான்.

தமிழ்நாடு முதலமைச்சரை போல் தைரியமிக்க வீரமிக்க முதலமைச்சர் இந்தியாவிலேயே கிடையாது.

செங்கோட்டையன் பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும்.

பாஜக அவரை ஏமாற்றி இருந்தால் தவெகவிக்கு சென்றிருக்க மாட்டார் அவர் பாஜகவின் ஸ்லீப்பர்செல். அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருப்பவர். தவெகவை வேண்டுமென்றால் பாஜகவுக்கு இழுத்துக் கொண்டு வர முடியுமே தவிர அவர் அதற்கான அசைமண்டிற்கு தான் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து.

யாருமே ஒரு கட்சியில் இருந்து வெளிவரும் பொழுது அவர்களை அழைப்பது இயற்கை. எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்கின்ற முடிவுக்கு வந்த பிறகு சேகர்பாபு நட்புரீதியில் கூட அழைத்து இருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதால்தான் அவர் வரவில்லை. செங்கோட்டையன் சேகர்பாபுவை சந்திக்கவில்லை என்றால் இதை விட்டு விடலாம்.

அனைவருமே களத்தில் போட்டிதான். ஆனால் வெற்றி எங்களுக்கு தான்.

மூன்றாவது அணி முதலில் உருவாக்கட்டும் அதன் பிறகு அது பலமானதா பலவீனமானதா என்பதை பார்க்கலாம்.

எடப்பாடி பழனிச்சாமி அவரை வெறுத்து செங்கோட்டையினை விரட்டிவிட்டார். அவருக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜக வோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை போய் டெல்லியில் சந்தித்து விட்டு அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார். தினகரன் ரோடு செல்கிறார் ஓபிஎஸ் ரோடு செல்கிறார் சசிகலாவை செங்கோட்டையன் சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக இறுதியாக தவெகவுடன் சென்று இருக்கிறார்.

அமலாக்கத் துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் துணிச்சலும் எங்களுக்கு இருக்கிறது. நேற்றைய தினம் கூட புதுக்கோட்டையில் வரப்போவதாக கூட சொன்னார்கள் ஆனால் வரவில்லை. எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

அதிமுகவை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதிமுக பலவீனம் அடைந்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்த இயக்கமாக உள்ளது.