தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் கீபோர்டு படிக்க வந்த மாணவிக்கு கீ போர்டு வாங்கி கொடுத்து…
பாலியல் தொல்லை கொடுத்த பங்குதந்தை.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குதந்தை பன்னீர்செல்வம் ( 69) என்பவர் இந்த ஆலயத்தில் பங்குதந்தையாக பணி புரிந்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாடல், கீபோர்டு வாசித்தல் பயிற்சிகள் தனி ஆசிரியை மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதானால் ஏரல் பகுதியில் இந்த ஆலய பங்கில் உள்ள மாணவ மாணவிகள் பயிற்சி சொல்லி கொடுப்பது வழக்கம்.
அதன் அடிப்படையில் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஏழ்மையான மாணவிக்கு
பங்குத்தந்தை பன்னீர்செல்வம் கீ போர்டு வாங்கி கொடுத்து உள்ளார்.
இதானல் கீ போர்டு படிக்கும் மாணவி பங்குத்தந்தையிடம் கீ போர்டு வாங்கி கொடுத்ததற்கு மாணவி கீ போர்டு படித்து முடித்து விட்டு பங்குத் தந்தை
இல்லத்திற்கு நன்றி சொல்ல சென்றபோது இந்நிலையில் 17 வயதான மாணவியிடம் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது தாயாருடன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் போலீசார் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








