ஆச்சரிய குறியாக இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
எங்களது குறித்த தேர்தல் குறி யாரைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எங்களுக்கு யாரும் போட்டியும் கிடையாது.

கடந்த காலத்தில் விஜய் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்தார் தற்போது கட்சி தொடங்கிய பிறகு சீ டீமாக மாறி உள்ளார்.
யாராலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்த பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விருந்து சென்று விடுமா என்பது சிண்டு முடிகிற வேலை சிண்டு முடியற வேலை எடுபடாது ….
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஐந்து புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி
விஜய் ஆச்சரிய குறியாக இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுடைய குறி தேர்தல் குறி
யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை
எங்களுக்கு போட்டியும் யாரும் கிடையாது
களத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் நாங்கள் சமமாக தான் பார்க்கிறோம் அதைத்தான்
எல்லோருமே எங்களுக்கு எதிரிகள் தான் அரசியல் எதிரிகளை தவிர தனிப்பட்ட எதிரிகள் கிடையாது தமிழ்நாட்டை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடர் ஆட்சியை தான் மக்கள் விரும்புவார்கள் அவர்கள்தான் முடியும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்
நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் பொய்யான வாக்குறுதியை நாங்கள் கொடுப்பது கிடையாது.
யாரும் ஏமாற்று வேலைகளை செய்யலாம் அந்த ஏமாற்று வேலைகள் எடுபடாது. நான் தொடக்கத்திலிருந்து கூறி வருகிறேன் விஜய் பாஜகவின் சீ டீம்
ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஸ்லீப்பர் செல்லாக விஜய் இருந்தார் ஆனால் தற்போது சீ டீமாகமாறி உள்ளார்.
தேர்தல் அறிக்கை என்பது பல கூட்டாக விவாதித்து எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டு தான் தேர்தல் அறிக்கை உருவாகிறது
கடந்த காலங்களில் திமுக தந்த கலைஞர் டிவி இன்னமும் பல வீடுகளில் ஓடிக் கொண்டுள்ளது நடுவில் அதிமுக தகர டப்பா போன்று வாஷிங் மெஷின் மிக்ஸி ஆகியவற்றை தந்தனர் அதெல்லாம் காயலான் கடைக்கு போய் விட்டது
நாங்கள் தரமான பொருளை தருகின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
அறிவு திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை திராவிட இயக்கத்தினுடைய வரலாறை இளைய தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் நடத்தி திருவிழாவை தவிர வேறு ஏதும் இல்லை இது குறித்து புரிதல் விஜய்க்கு இல்லை
விஜயின் ஒரே எண்ணம் ஆட்சிக்கு வந்து உட்கார்ந்து விட வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்
தமிழ் மக்களைப் பற்றியோ தமிழ் மொழியைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறை கிடையாது
எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்த விதமான கவலையும் கிடையாது
விஜய் தரம் தாழ்த்தி பேசிக்கொண்டு தனக்குத்தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார் அதற்கு நாங்கள் ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும்
எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது
திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது இதனால் காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது இனி வருவதெல்லாம் சிண்டு முடிகிற வேலை சென்று விடுகிற வேலை இங்கு எடுபடாது
சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தவறு இருந்தால் சட்டப்படி அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.








