• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சுகாதாரமற்ற கட்டண கழிப்பறையில் கொள்ளை..,

ByVasanth Siddharthan

Nov 17, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் பேருந்து நம்பியே பயணம் செய்து கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் பழனி நகராட்சி மூலம் பழனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறை மிகவும் சுகாதாரமற்ற நிலையிலும், கதவுகள் பெயர்ந்தும், டைல்ஸ்கற்கள் பெயர்ந்தும், ஒட்டடை கூட அடிக்காமல் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று செய்தி சேகரிக்க சென்றபோது அங்கு சிறுநீர் கழிக்க மூன்று ரூபாயும் ,கழிவறைக்கு ஐந்து ரூபாயும் பதாகைகள் வைக்கப்பட்டு புகார் தொடர்புக்கு என்ற இடத்தில் தொலைபேசி எண் மறைத்து வைக்கப்பட்டு நகராட்சி ஊழியர் ஒருவர் ஒரு நபருக்கு சிறுநீர் மற்றும் கழிவறைக்கு பொத்தாம் பொதுவாக 10 ரூபாய் வசூல் செய்து வந்தார்.

எதற்காக பத்து ரூபாய் வசூலிக்கறீர்கள் என்று கேட்டதற்கு சுத்தம் செய்வதற்கு வேலைக்கு வைத்துள்ள நபர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றார். மேலதிகாரிகள் சொன்னதை கேட்டு தான் நாங்கள் வசூல் செய்கிறோம் என்ற நகராட்சி ஊழியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பழனி கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஊர் திரும்ப பேருந்து நிலையம் வரும்போது நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட கட்டண கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையிலும் தொற்றுநோய் பரவும் அபாயத்திலும் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் கழிவறை பூட்டப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கழிவறைகளை பூட்டப்பட்டு கராராக வசூலில் ஈடுபட்டு வருது ஊழியர்களின் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.