• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது.,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டு பன்றிகளை வேட்டையாடிய வீரலப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து விஜயன் மற்றும் அம்பிளிக்கை பகுதியை சேர்ந்த செல்வராஜ் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையின் போது வெடிக்காத சில வெடி குண்டுகளையும் கைப்பற்றினர் .

விசாரணையின் போது பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி வனதுறையினரை கண்டு தப்பி ஓடிய வீரலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தேடி வருகின்றனர்.

அதே போல் அவுட் காய்களை தயார் செய்து விற்ற திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரையும் பிடித்தனர்.

குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.