• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி..,

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற  வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது.

வழக்கின் விசாரணையை நீதிமன்ற கோப்புக்கு விரைவாக எடுக்க நடவடிக்கை மேற்கொண்டது உட்பட கடந்த 2 மாதங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உட்பட 57 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  . மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.”இந்த நிகழ்ச்சியில். எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் மற்றும் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சேவியர் உள்பட  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.