புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கிழக்கு கிழக்கு கரைசாலையில் மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு
எட்டாம் ஆண்டு நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தின் பெரிய மாடு நடமாடு சின்ன மாடு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது

சீறி சென்ற மாட்டு வண்டிகளை பந்தய ரசிகர்கள் சாலையில் இருபுறமும் கண்டு களித்தனர் இதில் 90க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் 4 லட்ச ரூபாய் ரொக்க பணமும் கேடயம் தட்டு வண்டி பிரிட்ஜ் போன்றவை வழங்கப்பட்டது

புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தேனி மதுரை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கொண்டு வந்து பந்தயத்தில் கலந்து கொண்டனர்
பாதுகாப்பு பணி மணமேல்குடி காவல் துறையினர் மேற்கொண்டனர்




