புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி இடையாத்திமங்கலத்தை சேர்ந்த மருதுபாண்டி இந்திரா ஆகியோரின் மகன் முத்துப்பாண்டியன் (29) என்ற வாலிபர் இவர் புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிப்காட் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்

இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முத்துப்பாண்டியனின் உடலை அனுமதிக்கப்பட்டு உடல் முழு உறுப்பு தானங்களையும் திருச்சி சென்னை மதுரை ஆகிய பல்வேறு இடங்களுக்கு அதிவேக குளிர்சாதன ஆம்புலன்ஸ் மூலம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் வகையில் எடுத்துச் செல்லப்பட்டனர்
எனவே விபத்தில் மூளை சாவு அடைந்து இறந்து போன முத்துப்பாண்டியனின் இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் இவர் மட்டும்தான் தனது ஏழ்மையான குடும்பத்தை தற்காத்து வந்த நிலையில் இறந்துள்ளார் எனவே தமிழக அரசு இவர்களது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொண்டனர்







; ?>)
; ?>)
; ?>)