பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் வாயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி – திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் மீனாட்சி சுந்தரம் தலைமையிலும் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் அறிவுறுத்தலின் பேரில் தொகுதி தலைவர் பாலமுருகன் தலைமையிலும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பீகார் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை கொண்டாடும் விதமாக ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு கொண்டாடினர்








; ?>)
; ?>)
; ?>)