தாம்பரம் பகுதியில் உள்ள Foto World புகைப்பட நிலையம் தனது 4ஆம் புதிய கிளை திறப்பு விழாவை மிகச் சிறப்பாக இன்று கொண்டாடியுள்ளது.
வண்ணமயமான அலங்காரங்கள், வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வமான பங்கேற்பு ஆகியவற்றால் நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

இந்த திறப்பு விழாவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்
மேலும் மக்கள் நலனில் செயல்பட்டு வருபவர்களில் ஒருவரான தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் திறந்து வைத்தார்.
அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மீ. அ. வைத்தியலிங்கம், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி. காமராஜ்,S. இந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் உள்ளூர் பகுதிகளில் செயற்பட்டு வரும் பல சமூக அமைப்பு தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் இளைஞர் முன்னோடிகள் ஆகியோரின் பெயர்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் Foto World நிறுவனம் தொடர்ந்து வளர வேண்டும் என்பதற்கான நல்வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
நிகழ்வில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட ஸ்டூடியோ வசதிகளை நேரடியாக பார்வையிட்டனர். புகைப்படம், வீடியோ, ஸ்டூடியோ சேவைகள் ஆகிய துறைகளில் தரமான சேவைகளை வழங்கி வரும் Foto World, புதிய கிளை துவக்கத்தை ஒரு மைல்கல்லாக கொண்டாடியுள்ளது.
நிகழ்வை முன்னெடுத்தவர் , Foto World நிறுவனத்தின் ரமணி ஆதிமூலம் M.C மகளிர் அணி அமைப்பாளர், உரிமையாளர். கருணாநிதி கெங்கம்மாள்.
புதிய வசதிகள் தொடக்கத்துடன், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் பகுதியில் நடைபெறும் தொழில் மற்றும் வணிக முன்னேற்றத்தில் Foto World போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இதனுடன், 4ஆம் ஆண்டு திறப்பு விழா பொதுமக்கள் பங்கேற்பால் மகிழ்ச்சியான சூழலில் நிறைவுற்றது.






; ?>)
; ?>)
; ?>)
