புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் உள்ள திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயிற்சி விமானம் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த விமானம் சேலம் மாவட்டம் எக் ஒர்க் என்ற தனியார் விமான பயிற்சி நிலையத்திற்கு சொந்தமானது எனவும் இன்று காலை பயிற்சி விமானம் சேலத்தில் இருந்து காரைக்குடி சென்றதாகவும் பின்பு காரைக்குடியிலிருந்து சேலம் செல்வதற்காக புதுக்கோட்டை மாவட்ட வானிலை எல்லை பகுதியில் வரும் பொழுது பயிற்ச்சி விமானத்தின் இறக்கை பகுதி பழுதடைந்ததாகவும் இது சம்பந்தமாக சேலத்தில் உள்ள தனியார் மான பயிற்சி நிலையத்திற்கும் பின்பு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கும் தொடர்பு கொண்டும் விமான தொடர்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் விமானத்தை ராகுல் என்பவர் ஒட்டி வந்து உள்ளார் மேலும் அந்த விமானத்தில் பயிற்சியாளராக ரசூல் என்பவர் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் விமானத்தின் கோளாறு சரி செய்ய முடியாது எனவும் ஆபத்து ஏற்படும் என்ற சூழல் ஏற்பட்டதால் விமானத்தை ஓட்டி வந்த ராகுல் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை பத்திரமாக சாலையில் இறக்கியுள்ளார். அப்பொழுது சாலையில் சென்ற வாகனங்கள் மீது விமானம் மோதாமல் நல்வாய்ப்பாக தப்பிவுள்ளது. மேலும் வாகன ஒட்டிகளும் விமானத்தின் சூழ்நிலையை தெரிந்து வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளனர்.

இதன்பிறகு விமானம் தரையில் இறக்கும் பொழுது முன் பக்க பகுதி சேதம் அடைந்தது. மேலும் இது சம்பந்தமாக திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விமானத்தின் பயணம் செய்த ராகுல் மற்றும் ரசூல் ஆகியோர் லேசான காயம் அடைந்து கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு திரும்பி உள்ளனர். தற்பொழுது அவர்கள் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு குளத்தூர் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்புத்துறை காவல்துறையினர் விமானத்தை பாதுகாப்பான முறையில் சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளனர்.
மேலும் விபத்து நடைபெறா வண்ணம் ஏராளமான போலீசாரம் குவிக்கப்பட்டுள்ளனர் இது பற்றி திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது இந்த பயிற்சி விமானம் பழுது நீக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் எனவும் இது சம்பந்தமாக சேலத்தில் உள்ள தனியார் விமான பயிற்சி நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதாகவும் விமானத்தை லாரி மூலமாக எடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று முழுவதுமாக பழுது சரி செய்யப்பட்டு அதன் பிறகு விமானம் எடுக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டது அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











; ?>)
; ?>)
; ?>)