சென்னை தாம்பரம் அருகே உள்ள பள்ளிகரனையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அண்ணாமலை அன்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜீவன்,
“இந்த கூட்டத்தின் நோக்கம் சமூக சேவை, தொழில் மற்றும் விவசாய வளர்ச்சி, லஞ்சம்–ஊழல் இல்லாத சமுதாயம் உருவாக்குவது,” எனத் தெரிவித்தார்.

மேலும், அண்ணாமலை அவர்களின் அன்பு, நேர்மை, சேவை மனப்பான்மையால் உருவான அமைப்பாக இது இயங்கும் என்றும், அவருக்காக மாநிலம் முழுவதும் உறுதுணையாக செயல்படுவோம் எனவும் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தலைவராகவும் பிரதிநிதிகளாகவும் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.











; ?>)
; ?>)
; ?>)