கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தாறு யூனியன், வாகைத்தாவூர் கிராமத்தில் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாய் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழல் குடையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ஊர் பொதுமக்கள் சார்பாக மேளதாளத்துடன் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர், இந்நிகழ்வில் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் திரு காளியப்பன், பஞ்சாயத்து துணைத் தலைவர் திரு தங்கதுரை, வாகைத்தாவூர் ஊர் நாட்டாமை திரு. போத்திராஜ், முன்னாள் ராணுவ வீரர் திரு துரைப்பாண்டியன், சங்கிலி பாண்டியன், ஆசூர் சொசைட்டி தலைவர் திரு கிருஷ்ணன், மணிகண்டன், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வாகைத்தாவூர் திமுக கிளைக் கழக செயலாளர் திரு மாணிக்கம் செய்திருந்தார்.












; ?>)
; ?>)
; ?>)