தமிழ்நாடு மக்கள் ஓற்றுமை மேடை மற்றும் சென்னை மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து “மதசார்பின்மையே இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்” என்ற கருத்தரங்கம் தாம்பரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில், தாம்பரம் பொறுப்பாளர் கோவிந்தன் வரவேற்பில் நடைபெற்றது.

கருத்தரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், மதிமுக மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன், திராவிட கழக மாவட்ட தலைவர் முத்தையன், மமக மாநில இளைஞரணி செயலாளர் தமீமன்சாரி, மாநில வழக்கறிஞர் செயலாளர் முஜிப்பூரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்நிகழ்வில் பேசிய மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப்,
“ஊர் பிள்ளையார் வேறு, அரசியல் பிள்ளையார் வேறு; நாங்கள் அரசியல் பிள்ளையாரையே எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
கருத்தரங்கில் மமக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திராவிட கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)