புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் இவரது இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயு தீர்ந்ததால் நேற்று மாலை முழு கொள்ளளவுடன் கூடிய சமையல் எரிவாயுவை சமையல் எரிவாயு ஊழியர் கொண்டு வந்து மாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தான் குமரேசனின் மனைவி லட்சுமி கேஸ் ஸ்டவ்வை நேற்று இரவு பற்ற வைக்கும் பொழுது சிலிண்டர் கசிவு இருந்தது தெரியவந்துள்ளது. அப்போது இது குறித்து சமையல் எரிவாயுவை மாட்டிச்சென்ற ஊழியரிடம் கேட்டபோது அது வேற ஏதாவது இருக்கும் நீங்கள் சமையல் செய்யுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று காலை சமையல் செய்வதற்காக லட்சுமி கேஸ் ஸ்டவ்வை பற்றவைக்கும் பொழுது சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி வீட்டில் இருந்த ஈர கோணிப்பை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் தீ அணையாமல் மளமல்லவென கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. மேலும் இந்த தீயை அணைக்கும் முயன்ற லட்சுமியும் காயம் அடைந்த நிலையில் வீட்டில் உள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு இது குறித்து தீயணைப்பு துறைவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குமரேசனின் வீடு முழுமையாக இருந்து சேதமடைந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்த அனைத்து அரசு ஆவணங்களும் வீட்டு உபயோக பொருட்களும் துணிமணிகளும் எரிந்து சாம்பலானது. இதனால் குமரேசனின் குடும்பத்தினர் மாற்றுத் துணி கூட இல்லாமல் பாதிப்படைந்த நிலையில் இந்த தீ விபத்தில் காயம் அடைந்த குமரேசனின் மனைவி லட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் தீயில் அனைத்தையும் பறிகொடுத்து விட்டு நிற்கதியாக நிற்கும் குமரேசனின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி என கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)