• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் திமுகவில் இணைந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்

Byசொர்ணா

Dec 15, 2021

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் இணைந்தனர்.

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் திமுக அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் அதிமுக கீழக்குயில்குடி கிளை செயலாளர் செல்வேந்திரன் மருது சேனை அமைப்பின் மாநிலச் செயலாளர் முருகன் தலைமையில் அதிமுக, அ ம மு க சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், அவைத் தலைவர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சந்திரலேகா வெற்றி புவனேஸ்வரி ராஜசேகர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மதன், விமல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.