நான் போட்ட Special டீ எப்டி இருக்குனு சொல்லுங்க என, முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கடை ஓனர் மற்றும் டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்தார்.
முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் தினந்தோறும் சைக்கிள் அல்லது வாக்கிங் செய்து மக்களை தினம்தோறும் சந்திப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி, இன்றைய தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், கார் மூலம் விராலிமலை சென்ற அவர், அங்கு டீக்கடையில் டீ அருந்தி விட்டு, மக்களை சந்தித்து கொண்டு இருந்தார். அப்போது அந்தக் கடைக்கு வந்த பொதுமக்களுக்கும், கபடி வீரர்களுக்கும் டீ வாங்கிக் கொடுத்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்த டீ மாஸ்டர் இடம் நீங்க எல்லாத்துக்கும் டீ போட்டு தரீங்க நான் உங்களுக்கு டீ போட்டு தரேன் என்று கூறிவிட்டு, டீ மாஸ்டருக்கும். கடை ஓனருக்கும் டீ போட்டு கொடுத்து டீ எப்படி இருந்தது என்று கேட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அது மட்டும் இல்லாமல் அங்கே வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனதுக்கும் டீ போட்டு கொடுத்து அவர்களிடமும் டீ எப்படி இருந்தது என்று கேட்டதால், அந்தப் பகுதியில் சிரிப்பிலை ஏற்பட்டது. ஒரு முன்னாள் அமைச்சர் சாதாரணமாக டீக்கடையில் வந்து மக்களோடு, மக்களாக டீ போட்டுக் கொடுத்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
