மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொருளியல் மாணவர்கள் உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பழங்குடியின மலைவாழ் மக்களின் உடைகள் தேவைகள் குறித்து பள்ளியின் பொருளியல் துறை ஆசிரியர் முருகேசன் குயாஸ் தொண்டு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று குயாஸ் தொண்டு நிறுவனர் சந்திரலேகா புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

மேலும் சந்திரலேகா பேசும்பொழுது ஆசிரியர் வேண்டுதலுக்கு இணங்க இம்மக்களுக்கு புத்தாடைகளும், இனிப்பும் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் எதிர்வரும் காலங்களில் இம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசோடு இணைந்து செய்ய திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.