மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 6வது வார்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குளியல் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. 6வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியல் தொட்டி அமைக்க வேண்டும் என்று பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த இடத்தை பார்வையிட்ட பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நிதி உதவி செய்து குளியல் தொட்டி அமைத்துக் கொடுத்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர். வாடிப்பட்டி பேரூராட்சி வரிவிதிப்பு குழு உறுப்பினரும் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கவுன்சிலராக வெற்றி பெற்று வரும் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் வாடிப்பட்டி திமுகபேரூர் முன்னாள் நிர்வாகி பிரகாஷ் இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி மாயாண்டி சுந்தர் முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வி பூமிநாதன் கார்த்திகேயன் நாகராஜன் மணிகண்டன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வி பூமிநாதன் நன்றி கூறினார்.