• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர்,பேருந்து நிலையத்தில் நவீன இலவச கழிப்பறைகள்..,

ByM.S.karthik

Oct 18, 2025

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் ரூ.31.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்கள் நவீன கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆணையாளர் சித்ரா விஜயன் திறந்து வைத்தார்கள்.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் இலவச நவீன 5 ஆண்கள், 5 பெண்கள் கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு கழிப்பறைகளிலும் 9 சிறுநீர் பிறைகள். 2 வெஸ்டன் கழிப்பறைகள் (மாற்றுத் திறனாளி மற்றும் முதியவர்கள்) 4 இந்தியன் டைப் கழிப்பறைகள், 2 வாஸ்பேஷ்கள், மின்விளக்கு வசதி மற்றும் தண்ணீர் வசதியுடன் முற்றிலும் நவீன அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ரூ.31.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 சிறுநீர் பிறைகள் மற்றும் 5 நவீன ஆண்கள் கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது. பிற கழிப்பறைகளில் கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்நிகழ்வில் தலைமை பொறியாளர் பாபு, துணை ஆணையாளர் சித்ரா, செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவி செயற் பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் ஜெயா, சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர் மாலதி மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.