விருதுநகரில் சாரல் மழை. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

மேலும் தூத்துக்குடியில் மழையின் காரணமாக நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. ஆனால் விருதுநகரில் காலை 6 30 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில் ” இந்த சாரல் மழையினால் தான் பூமி குளிர்ச்சி அடையும், மேலும் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் உதவும்” என்று கூறினார்.