விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இந்த கோவிலுக்கு வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அளித்த காணிக்கையை நான்காவது சனி வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள் கண்காணிப்பாளர் அர்ஜுன் சரக ஆய்வர் முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் 6 லட்சத்து 21 ஆயிரம் 956 இருந்தது உண்டியல் கண்ணிக்கை என்னும் பணியில் கோயில் அலுவலர்களும் மகளிர் சுய உதவி குழுவினரும் கலந்து கொண்டனர்.
