உசிலம்பட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்களும் ஆதரவாக பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அலுவலக உதவியாளர் ஊதியத்திற்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வுக்கான கால வரையறையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதுமாக கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டார கிராம உதவியாளர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் கிராம உதவியாளர்களுக்கு ஆதரவாக பங்கேற்று, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.