கடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ARR சீனிவாசன் . வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் அலுவலகம் ஒன்று அமைத்து தரப்படும்.

ARR சீனிவாசனுக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அலுவலகம் ஒன்று உள்ளது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டு காலங்களில் அவர் ஒரு நாள் கூட இந்த அலுவலகத்திற்கு வந்ததும் இல்லை,திறந்ததும் இல்லை. இந்த அலுவலக கட்டிடம் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
