தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் கடந்த பத்தாம் தேதி இயற்கை மரணம் அடைந்தார் புதுக்கோட்டை காந்தி நகரில் அவருடைய இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் இன்று ஆதிதிராவிடர் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற வருகை புரிந்தார்.

அப்பொழுது தொல் திருமாவளவனுடன் வந்த அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பெரம்பலூர் இரா.கிட்டு என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்களின் அனுமதி இல்லாமல் தொல் திருமாவளானை மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தங்களை கேட்காமல் நிகழ்ச்சியை ஏன் மாற்றீர்கள் என பெரம்பலூர் இரா கிட்டுவிடம் வாய் தகராறு ஈடுபட்ட புதுக்கோட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து தொல் திருமாவளவனுடன் வந்த பாதுகாப்பு போலீசார் பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்குள் ஏற்பட்ட அடிதடி தகராறால் அந்த இடம் பரபரப்பானது இதையடுத்து சம்பவ இடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த தொல் திருமாவளவன் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.