• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள்..,

ByS. SRIDHAR

Oct 12, 2025

திமுக காங்கிரஸ் கூட்டணி என்றைக்கும் உறுதியாக இருக்கும் எந்த விதமான குழப்பமும் அதில் இருக்காது

அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்தோர். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள். விஜய் குறித்து தேர்தல் முடிவு வரும் வரை அனைவரும் கூறுவதும் ஆருடம் ஆகத்தான் இருக்க முடியும்

கரூர் விவரத்தின் போது ராகுல் காந்தி விஜையுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதற்கு தான் இருக்கும்

விஜய்யோடு காங்கிரஸ் செல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை செல்லக்கூடாது என்றும் நான் கூறவில்லை

தேர்தல் நேரத்தில் மக்கள் கொடுக்க முடிவு நடிகர் விஜய்க்கு பக்குவத்தை வரவைக்கும்…
புதுக்கோட்டையில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் முன்னாள் தலைவர் என்ற முறையிலும் கூறுகிறேன் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது அதில் எந்த குழப்பமும் இல்லை

முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்கள் உட்பட பலர் தங்களுடைய கருத்துக்களை கூறலாம்

ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றைக்கும் உறுதியாக இருக்கும் எந்த விதமான குழப்பமும் இருக்காது

விஜய் கட்சி தொடங்கிய உடன் செய்தியாளர் சந்திப்பில் அரசியலில் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி இருக்கும் என்று ஏற்கனவே நீங்கள் கூறியிருந்தீர்கள் அந்த கண்ணிவெடியில் விஜய் சிக்கிக்கொண்டாரா என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த திருநாவுக்கரசர் அரசியல் தொடங்கிய போது விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஜாக்கிரதையாக வைக்க வேண்டும் என்று கூறினேன் நான் சொன்னதால் அவர் சிக்கவில்லை

அதிமுக கூட்டணியில் எவ்வளவோ குழப்பங்கள் உள்ளன அதை சரி செய்வதை விட்டுவிட்டு திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது என்று எடப்பாடி எதற்காக கூற வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதைத்தான் கூறுவார்

அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ அல்லது ஒரு நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது
இதற்கு சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் உதாரணமாக கூறலாம்
தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள் ஒரு கட்சியையோ அதன் தலைவரையோ மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தான் முக்கியம்

அந்த முடிவு வரும் வரை அனைவர் கூறுவதும் ஆருடமாக தான்இருக்க முடியும்

ஏற்கனவே அண்ணா திமுக வோடு கூட்டணி வைத்துக்கொண்டு எதற்காக பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை

கூட்டணியில் இல்லாத கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்பது கூட இருக்கலாம் அது தவறு கிடையாது கூட்டணிக்குள் விஜய் போவதும் போகாததும் அவருடைய விருப்பம்

பாஜக அழுத்தம் கொடுக்கலாம் நிர்பந்தம் செய்யலாம் அவ்வாறு அவர்கள் கொடுக்கின்றன அதற்கு பணிந்து விஜய் செயல் படுகிறாரா அது பாஜகவும் விஜயும் சம்பந்தப்பட்ட விஷயம் அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை

அப்படி யாரையும் அச்சுறுத்தி கூட்டணி உண்டாக்க முடியும் என்று நான் கருதவில்லை

கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டுமா அல்லது சிபிஐ விசாரணை வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் நாளை நீதிமன்றத்தில் தீர்ப்பு வரப்போகிறது அதுவரை பொறுத்திருப்போம்

கரூர் விவகாரத்தில் ராகுல் காந்தி முதலமைச்சர் மட்டுமல்லாது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யுடனும் பேசி நடந்ததை கேட்டு அறிந்து உள்ளார் இதில் அரசியல் உள்ளது என்று பலர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் எனக்கு தெரிந்தவரை ராகுல் காந்தி விஜய்யோடு அரசியல் பேசி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை பேசி இருக்க மாட்டார் நடந்த சம்பவம் என்ன என்பது குறித்தும் வருத்தம் தெரிவித்தும் அவர் பேசியிருப்பாரே தவிர கூட்டணி தொடர்பாகவோ வேறு ஏதும் தொடர்பாகவோ அவர் பேசி இருக்க மாட்டார்

விஜய்யோடு காங்கிரஸ் செல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை செல்லக்கூடாது என்றும் நான் கூறவில்லை

தொடர்ச்சியாக திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று நான் கூறி வருகிறேன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அரசியல் பக்குவம் வந்துவிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் பக்குவம் வர வேண்டும் என்றால் செடி வளர்ந்து பூ பூத்து காய் காய்த்து கனியாக வேண்டும் அனுபவம் தான் அவரை பக்குவமாக வேண்டும்

கடைசியில் தேர்தல் நேரத்தில் மக்கள் கொடுக்க முடிவு அவருக்கு பக்குவத்தை வர வைக்கும்.

https://we.tl/t-afaPo4dz0G