தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு நேற்று துவங்கியது.

வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செந்தூரப் பாண்டியன் தலைமையில், தீயணைப்புத்துறையினர் பொதுமக்க-ளுக்கு தீ தடுப்பு குறித்து எடுத்துரைத்தனர். கார்களில் திடீரென தீப்பிடித்தால், அதை அணைப்பதற்கு காரிலேயே ஒரு சிறிய தீய-ணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர்களில் கேஸ் கசிவு இருந்தால், அதை அறிந்து மின்விளக்கு போடக்கூ-டாது. சிலிண்டரில் ரெகுலேட்டரை அணைத்து விட்டு, அதை தனியாக எடுத்து விட்டு, மூடியால் மூட வேண்டும்.

அதன் பின், சம்பந்தப்பட்ட கேஸ் எஜன்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் படகுகள், பரிசல்களில் பயணித்தால், உயிர் காக்கும் உடைகளை அணிய, அறிவுறுத்தினர். வெம்பக்கோட்டை ‘வாங்க கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில், தீ தடுப்பு, பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தூரப் பாண்டியன் தலைமை வகித்தார்.