மதுரை புதூர் பகுதியில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி படைபாற்றலை மேம்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் புத்தக வாசிப்பு இயக்கம் சார்பாக “நாமும்! நூலும்! நூலகமும்!” என்ற தலைப்பில் சிறப்பு கூட்டமும் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அல் அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். மதுரை வாசகர் வட்டத்தின் தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் இராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் வாசிப்பால் உயர்ந்த தலைவர்களின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். தமிழாசிரியர் தௌபிக் இராஜா நன்றி கூறினார். உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன் மற்றும் அல்ஹாஜ் முகமது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





