விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மையம் மாவட்டம் ஒரத்தநாடு தலைமை தபால் நிலையம் எதிரே தலைவர் எழுச்சித் தமிழர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை படுத்த வேண்டி ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி என்கின்ற தென் தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை புதுக்கோட்டை மண்டல செயலாளர் சதா சிவக்குமார் கலந்துகொண்டு தலைவர் திருமாவளவனுக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலனி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வழக்கு செய்து கைது செய்யவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.


இந்த நிகழ்வில் மைய மாவட்ட செயலாளர் (பொ) தங்க முருகானந்தம் ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர அன்பு என்கின்ற ஆண்டவன் தஞ்சை மைய ஒன்றிய செயலாளர் மறியல் வினோத் திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரா செந்தில்குமார் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்க குரு ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஆம்பல் பிரகாஷ் முன்னாள் மாவட்ட செய்தி தொடர்பாளர் தஞ்சை லெனின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் சிறுத்தை குரு ஒன்றிய துணைச் செயலாளர் சிறுத்தை சிவா நகரப் பொறுப்பாளர் அன்னை கோவிந்தராஜ் துணைச் செயலாளர் தென்னவை பாலு திருவோணம் தங்க அன்பழகன் சோழபுரம் திருமுருகன் மற்றும் பெருந்திரளான சிறுத்தைகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.




